தமிழ்

இந்தப் பதிவிறக்கச் சேவையை உங்கள் சாதனம் ஆதரிக்கவில்லை என்றாலும், பதிவிறக்க தகவலைக் காண இதைப் பயன்படுத்தலாம். கணினியில் பதிவிறக்குவதற்காக பதிவிறக்கங்களுக்கான இணைப்புகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படலாம்.

COOLPIX B700 சாதனநிரல்

உங்கள் இயக்க முறைமையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • Windows
  • Mac OS

இந்த மென்பொருள் புதுப்பிப்பு நிரல் என்பது மேலே பட்டியலிடப்பட்டுள்ள வாடிக்கையாளர்-சொந்தமான சாதனத்திற்கு (“பாதிக்கப்பட்ட தயாரிப்பு”) ஆகும், மேலும் இது கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்வதன் மூலம் மட்டுமே வழங்கப்படும். “ஏற்றுக்கொள்கிறேன்” என்பதை தேர்ந்தெடுத்து “பதிவிறக்கு” என்பதை கிளிக் செய்வது ஒப்பந்தத்தில் இருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைக் குறிக்கிறது. பதிவிறக்கத்தை தொடங்குவதற்கு முன்பு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள் என்பதில் உறுதியாக இருக்கவும்.

  • • இந்தச் சேவை, COOLPIX B700 கேமராக்களுக்கான சாதனநிரலை பதிப்பு 1.6 -க்குப் புதுப்பிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய மென்பொருளை வழங்குகிறது. தொடர்வதற்கு முன்பு, கேமராவின் சாதனநிரல் பதிப்பைச் சரிபார்க்கவும். மேலே பட்டியலிடப்பட்டுள்ள சாதனநிரல் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால், இந்தப் புதுப்பிப்பை நீங்கள் பதிவிறக்கவோ நிறுவவோ தேவையில்லை.
  • • இந்தப் புதுப்பிப்பில் முந்தைய புதுப்பிப்புகளில் செய்யப்பட்டுள்ள எல்லா மாற்றங்களும் அடங்கும்.
  • • தொடர்வதற்கு முன்பு கீழே இருக்கும் விபரத்தைப் படிக்கவும்.
சாதனநிரல் பதிப்பு 1.5 முதல் 1.6-இலிருந்து மாற்றங்கள்
  • • பின்வரும் சிக்கல் சரிசெய்யப்பட்டது:
    • - SnapBridge Download pictures (படங்களைப் பதிவிறக்குக) என்பதின் சிறுபடப் பட்டியலில் படங்கள் காண்பிக்கப்படும் வரிசை சில நேரங்களில் மாறும்.
      குறிப்பு: SnapBridge-ஐ 2.8.3 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும்.
முந்தைய பதிப்புகளிலிருந்து மாற்றங்கள்
சாதனநிரல் பதிப்பு 1.3 முதல் 1.5-இலிருந்து மாற்றங்கள்
  • • SnapBridge -இன் 1.2 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்பிற்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • • பின்வரும் சிக்கல்கள் சரிசெய்யப்பட்டன:
    • - மூவியானது படிமத் தரம் என்பதற்கு RAW + Fine அல்லது RAW + Normal என்பதுடன் “U (User Settings) பயன் முறை” என்பதில் பதிவு செய்யப்பட்டால், User settings சேமி என்பதைப் பயன்படுத்திச் சேமிக்கப்படும் படிமத் தரம் ஆனது RAW என்பதற்கு மாறும்.
    • - தொடர் கதிர்வீச்சளவு என்பதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆன் என்பதுடன் பயனர் அமைப்புகளைச் சேமிக்க User settings சேமி பயன்படுத்தப்பட்டால், பயன்முறையை “U (User Settings) பயன் முறை” என்பதற்குச் சுழற்றியபடி கேமரா ஆஃப் செய்யப்படும்போது, தொடர் கதிர்வீச்சளவு ஆனது ஆஃப் என்பதற்கு மாற்றப்படும்.
    • - தொடக்க அமைவுச் செயலாக்கத்தின்போது, மொழி/Language என்பதற்கு பயனர் ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்த பின்னர் வேறெந்த அமைப்புகளையும் சரிசெய்யவில்லை என்றால், ஜூம் கிடைக்காது.
    • - 10,000 படங்களுக்குப் பிறகு இடைவெளி டைமர் ஃபோட்டோகிராஃபி முடிவடையும்.
    • - கேமரா சில நேரங்களில் குறிப்பிட்ட சில Android சாதனங்களுடன் இணையாமல் போகும் சிக்கல் சரிசெய்யப்பட்டது.
சாதனநிரல் பதிப்பு 1.2 முதல் 1.3-இலிருந்து மாற்றங்கள்
  • கணினியால் சார்ஜ் என்பதற்கு ஆஃப்என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்போது ஒரு AC சார்ஜிங் அடாப்டருக்கு இணைக்கப்பட்டிருக்கையில் கேமரா சார்ஜ் ஆவதைத் தடுக்கும் ஒரு சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது.
சாதனநிரல் பதிப்பு 1.1 முதல் 1.2-இலிருந்து மாற்றங்கள்
  • • கேமரா மற்றும் SnapBridge பயன்பாட்டின் iOS 10.2 பதிப்பிற்கு இடையே நிலையற்ற இணைப்புகளை ஏற்படுத்தும் சிக்கல் சரிசெய்யப்பட்டது.
சாதனநிரல் பதிப்பு 1.0 முதல் 1.1-இலிருந்து மாற்றங்கள்
  • • SnapBridge பயன்பாட்டைப் பயன்படுத்தும் ஃபோட்டோ மற்றும் மூவி பரிமாற்ற நம்பகத்தன்மை மேம்பட்டுள்ளது.
  • • SnapBridge பயன்பாட்டைப் பயன்படுத்தி சேர்க்கப்பட்ட இருப்பிடத் தரவானது சில நேரங்களில் சரியாகக் காண்பிக்கப்படாமல் இருந்த சிக்கல் தீர்க்கப்பட்டது.
  • • அரிதான சூழ்நிலைகளில் கருப்பு-வெள்ளையில் பதிவுசெய்யப்படவிருக்கிற ஃபோட்டோகிராஃப்களைப் பாதிக்கின்ற சிக்கல் தீர்க்கப்பட்டது.
கேமராவின் சாதனநிரல் பதிப்பைப் பார்த்தல்
  1. கேமராவை ஆன் செய்யவும்.
  2. மெனுக்களைக் காட்ட கேமரா MENU பட்டனை அழுத்தவும்.
  3. மெனு ஐகான்களைக் காண்பிப்பதற்கு பலநிலை தேர்ந்தெடுப்பில் இடதுபுறம் அழுத்தவும், பின்னர் அமை என்பதை தனிப்படுத்தி, OK என்பதை அழுத்தவும்.
  4. அமை மெனுவில் சாதனநிரல் பதிப்பு என்பதை தனிப்படுத்தி, கேமராவின் சாதனநிரல் பதிப்பைக் காண்பிப்பதற்கு OK என்பதை அழுத்தவும்.
  5. கேமராவின் சாதனநிரல் பதிப்பைச் சரிபார்க்கவும்.
  6. கேமராவை ஆஃப் செய்யவும்.
தயாரிப்பு விளக்கம்
பெயர் COOLPIX B700 சாதனநிரல் பதிப்பு 1.6
ஆதரிக்கப்படும் கேமராக்கள் COOLPIX B700
ஆதரிக்கப்படும் சாதனநிரல் பதிப்புகள் பதிப்பு 1.0–1.5
கோப்புப் பெயர் F-B700-V16W.exe
இயக்க முறைமை
  • Microsoft Windows 11
  • Microsoft Windows 10
  • Microsoft Windows 8.1
குறிப்பு: கார்டு ரீடர் அல்லது உள்ளமைந்த மெமரி-கார்டுடன் கூடிய கணினி தேவை.
பதிப்புரிமை Nikon Corporation
காப்பக வகை சுய-பிரித்தெடுத்தல்
மறுஉற்பத்தி அனுமதிக்கப்படாது
கேமராவின் சாதனநிரலைப் புதுப்பித்தல்
  1. கணினியின் வன் வட்டில் கோப்புறை ஒன்றை உருவாக்கி, விருப்பம் போல் பெயரிடவும்.
  2. செயல்முறை 1-இல் உருவாக்கிய கோப்புறையில் F-B700-V16W.exe-ஐப் பதிவிறக்கவும்.
  3. புதிய கோப்புறையில் துணைக்-கோப்புறை ஒன்றுக்கு சாதனநிரலைப் பிரித்தெடுக்க F-B700-V16W.exe-ஐ இயக்கவும். கிடைக்கும் கோப்பு மற்றும் கோப்புறை வரிசை கீழே காட்டப்பட்டுள்ளது:
    • firmware (சாதனநிரலைக் கொண்டிருக்கும் துணைக்-கோப்புறை)
    • firmware.bin (“firmware” கோப்புறையில் இருக்கும் கேமராவின் சாதனநிரல்)
  4. கார்டு துளை அல்லது கார்டு ரீடர் ஒன்றைப் பயன்படுத்தி, கேமராவில் வடிவமைக்கப்பட்ட மெமரி கார்டு ஒன்றுக்கு “firmware” கோப்புறையை நகலெடுக்கவும்.
    குறிப்பு: சாதன நிரலை மெமரி கார்டின் “firmware” (அனைத்திற்கும் மேலுள்ள) கோப்பகத்தில் நகலெடுப்பதை உறுதிசெய்யவும். மூலக் கோப்பகத்திற்கு உள்ளே இருக்கும் ஒரு கோப்புறையில் புதிய சாதன நிரலை நகலெடுத்தால், கேமராவால் அதை அடையாளம் காண முடியாது.
  5. மெமரி கார்டை கேமராவில் செருகி கேமராவை ஆன் செய்யவும்.
  6. அமை மெனுவில் சாதனநிரல் பதிப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, சாதனநிரல் புதுப்பிப்பை முடிப்பதற்கு திரையிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  7. ஒருமுறை புதுப்பித்தல் முடிந்ததும், கேமராவை ஆஃப் செய்து மெமரி கார்டை அகற்றவும்.
  8. சாதனநிரல் புதிய பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

குறிப்பு: புதுப்பித்தலை முடிப்பதற்கு தேவைப்படும் உபகரணம் பற்றிய கூடுதல் விரிவான அறிவுறுத்தல்கள் அல்லது விபரத்திற்கு, பின்வரும் pdf கோப்பை பதிவிறக்கம் செய்யவும்:
CPX_MS_FirmUp_Win_Ta.pdf (PDF) (0.24 MB)

குறிப்பு: Nikon-அங்கீகரித்த சேவை பிரதிநிதி மூலமும் உங்களுக்கான புதுப்பித்தலை மேற்கொள்ளலாம்.

தயாரிப்பு விளக்கம்
பெயர் COOLPIX B700 சாதனநிரல் பதிப்பு 1.6
ஆதரிக்கப்படும் கேமராக்கள் COOLPIX B700
ஆதரிக்கப்படும் சாதனநிரல் பதிப்புகள் பதிப்பு 1.0–1.5
கோப்புப் பெயர் F-B700-V16M.dmg
இயக்க முறைமை
  • macOS Monterey பதிப்பு 12
  • macOS Big Sur பதிப்பு 11
  • macOS Catalina பதிப்பு 10.15
  • macOS Mojave பதிப்பு 10.14
  • macOS High Sierra பதிப்பு 10.13
  • macOS Sierra பதிப்பு 10.12
குறிப்பு: கார்டு ரீடர் அல்லது உள்ளமைந்த மெமரி-கார்டுடன் கூடிய கணினி தேவை.
பதிப்புரிமை Nikon Corporation
காப்பக வகை சுய-பிரித்தெடுத்தல்
மறுஉற்பத்தி அனுமதிக்கப்படாது
கேமராவின் சாதனநிரலைப் புதுப்பித்தல்
  1. F-B700-V16M.dmg-ஐப் பதிவிறக்கவும்.
  2. கீழே இருக்கும் கோப்புறை மற்றும் கோப்பைக் கொண்டிருக்கும் வட்டு படிமம் ஒன்றை ஏற்படுத்த F-B700-V16M.dmg ஐகானை இரு-கிளிக் செய்யவும்:
    • firmware (சாதனநிரலைக் கொண்டிருக்கும் துணைக்-கோப்புறை)
    • firmware.bin (“firmware” கோப்புறையில் இருக்கும் கேமராவின் சாதனநிரல்)
  3. கார்டு துளை அல்லது கார்டு ரீடர் ஒன்றைப் பயன்படுத்தி, கேமராவில் வடிவமைக்கப்பட்ட மெமரி கார்டு ஒன்றுக்கு “firmware” கோப்புறையை நகலெடுக்கவும்.
    குறிப்பு: சாதன நிரலை மெமரி கார்டின் “firmware” (அனைத்திற்கும் மேலுள்ள) கோப்பகத்தில் நகலெடுப்பதை உறுதிசெய்யவும். மூலக் கோப்பகத்திற்கு உள்ளே இருக்கும் ஒரு கோப்புறையில் புதிய சாதன நிரலை நகலெடுத்தால், கேமராவால் அதை அடையாளம் காண முடியாது.
  4. மெமரி கார்டை கேமராவில் செருகி கேமராவை ஆன் செய்யவும்.
  5. அமை மெனுவில் சாதனநிரல் பதிப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, சாதனநிரல் புதுப்பிப்பை முடிப்பதற்கு திரையிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  6. ஒருமுறை புதுப்பித்தல் முடிந்ததும், கேமராவை ஆஃப் செய்து மெமரி கார்டை அகற்றவும்.
  7. சாதனநிரல் புதிய பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

குறிப்பு: புதுப்பித்தலை முடிப்பதற்கு தேவைப்படும் உபகரணம் பற்றிய கூடுதல் விரிவான அறிவுறுத்தல்கள் அல்லது விபரத்திற்கு, பின்வரும் pdf கோப்பை பதிவிறக்கம் செய்யவும்:
CPX_MS_FirmUp_Mac_Ta.pdf (PDF) (0.21 MB)

குறிப்பு: Nikon-அங்கீகரித்த சேவை பிரதிநிதி மூலமும் உங்களுக்கான புதுப்பித்தலை மேற்கொள்ளலாம்.

இறுதி பயனர் உரிமை ஒப்பந்தம்

இலவச Adobe® Reader® மென்பொருளைப் பயன்படுத்தி கோப்புகளைப் பார்க்கலாம்.
Adobe® Reader® ஐ பதிவிறக்கு.