தமிழ்

இந்தப் பதிவிறக்கச் சேவையை உங்கள் சாதனம் ஆதரிக்கவில்லை என்றாலும், பதிவிறக்க தகவலைக் காண இதைப் பயன்படுத்தலாம். கணினியில் பதிவிறக்குவதற்காக பதிவிறக்கங்களுக்கான இணைப்புகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படலாம்.

COOLPIX P610 சாதனநிரல்

உங்கள் இயக்க முறைமையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • Windows
  • Mac OS

இந்த மென்பொருள் புதுப்பிப்பு நிரல் என்பது மேலே பட்டியலிடப்பட்டுள்ள வாடிக்கையாளர்-சொந்தமான சாதனத்திற்கு (“பாதிக்கப்பட்ட தயாரிப்பு”) ஆகும், மேலும் இது கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்வதன் மூலம் மட்டுமே வழங்கப்படும். “ஏற்றுக்கொள்கிறேன்” என்பதை தேர்ந்தெடுத்து “பதிவிறக்கு” என்பதை கிளிக் செய்வது ஒப்பந்தத்தில் இருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைக் குறிக்கிறது. பதிவிறக்கத்தை தொடங்குவதற்கு முன்பு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள் என்பதில் உறுதியாக இருக்கவும்.

  • • COOLPIX P610 கேமராக்களை பதிப்பு 1.3-க்கு புதுப்பிக்க பயன்படுத்தும் சாதனநிரலுக்கான மென்பொருளை இந்தச் சேவை வழங்குகிறது. தொடர்வதற்கு முன்பாக, கேமராவின் அமை மெனுவிலிருந்து சாதனநிரல் பதிப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, கேமராவின் சாதனநிரல் பதிப்பை சரிபார்க்கவும். மேலே பட்டியலிடப்பட்டுள்ள சாதனநிரல் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால் இந்த புதுப்பிப்பை நீங்கள் பதிவிறக்கவோ அல்லது நிறுவவோ தேவையில்லை.
  • • இந்தப் புதுப்பிப்பில் முந்தைய புதுப்பிப்புகளில் செய்யப்பட்டுள்ள எல்லா மாற்றங்களும் அடங்கும்.
  • • தொடர்வதற்கு முன்பு கீழே இருக்கும் விபரத்தைப் படிக்கவும்.
சாதனநிரல் பதிப்பு 1.2 முதல் 1.3-இலிருந்து மாற்றங்கள்
  • • பின்வரும் சிக்கல்கள் சரிசெய்யப்பட்டன:
    • - 1800 படங்களுக்குப் பிறகு இடைவெளி டைமர் ஃபோட்டோகிராஃபி முடிவடைந்த சிக்கல்.
    • - சந்திரன் பயன்முறையில் மூவிகளைப் படம்பிடிக்கும்போது சில நேரங்களில் மின்சக்தி ஸ்விட்ச்சைத் தவிர பிற கட்டுப்பாடுகளுக்கு கேமரா எதிர்வினையாற்றுவதை நிறுத்தக்கூடிய சிக்கல்.
முந்தைய பதிப்புகளிலிருந்து மாற்றங்கள்
சாதனநிரல் பதிப்பு 1.1 முதல் 1.2-இலிருந்து மாற்றங்கள்
  • • ஹாங்காங், மக்காவ் மற்றும் தைவானுக்கான விருப்பப் பகுதிகளை (POI) சரியாக காண்பிக்காத ஒரு சிக்கல் தீர்க்கப்பட்டது.
சாதனநிரல் பதிப்பு 1.0 முதல் 1.1-இலிருந்து மாற்றங்கள்
  • • பின்வரும் சிக்கல்கள் தீர்க்கப்பட்டன, இவை அரிய சூழ்நிலைகளில் நிகழும், மானிட்டர் மற்றும் மின்னணு காட்சிப்பிடிப்பு காட்சிகளுக்கு இடையே மாறுவதற்காக ஐ சென்சார் பயன்படுத்தப்படும்போது:
    - படிமங்கள் காட்டப்படாது அல்லது சரியாக சேமிக்கப்படும்.
    - கேமரா நிறுத்தப்படலாம்.
  • • இடைவெளி டைமர் ஃபோட்டோகிராஃபியைப் பயன்படுத்தி எடுக்கப்படும் ஒவ்வொரு படப்பிடிப்பிலும் குவிய இடநிலையை மாற்றும் கையால் குவியம் சிக்கல் சரிசெய்யப்பட்டது.
கேமராவின் சாதனநிரல் பதிப்பைப் பார்த்தல்
  1. கேமராவை ஆன் செய்யவும்.
  2. மெனுக்களைக் காட்ட கேமரா MENU பட்டனை அழுத்தவும்.
  3. மெனு ஐகான்களைக் காண்பிப்பதற்கு பலநிலை தேர்ந்தெடுப்பில் இடதுபுறம் அழுத்தவும், பின்னர் அமை என்பதை தனிப்படுத்தி, OK என்பதை அழுத்தவும்.
  4. அமை மெனுவில் சாதனநிரல் பதிப்பு என்பதை தனிப்படுத்தி, கேமராவின் சாதனநிரல் பதிப்பைக் காண்பிப்பதற்கு OK என்பதை அழுத்தவும்.
  5. கேமராவின் சாதனநிரல் பதிப்பைச் சரிபார்க்கவும்.
  6. கேமராவை ஆஃப் செய்யவும்.
தயாரிப்பு விளக்கம்
பெயர் COOLPIX P610 சாதனநிரல் பதிப்பு 1.3
ஆதரிக்கப்படும் கேமராக்கள் COOLPIX P610
ஆதரிக்கப்படும் சாதனநிரல் பதிப்புகள் பதிப்பு 1.0–1.2
கோப்புப் பெயர் F-P610-V13W.exe
இயக்க முறைமை
  • Microsoft Windows 10 Home
  • Microsoft Windows 10 Pro
  • Microsoft Windows 10 Enterprise
  • Microsoft Windows 8.1
  • Microsoft Windows 8.1 Pro
  • Microsoft Windows 8.1 Enterprise
  • Microsoft Windows 7 Home Basic
  • Microsoft Windows 7 Home Premium
  • Microsoft Windows 7 Professional
  • Microsoft Windows 7 Enterprise
  • Microsoft Windows 7 Ultimate
குறிப்பு: கார்டு ரீடர் அல்லது உள்ளமைந்த மெமரி-கார்டுடன் கூடிய கணினி தேவை.
பதிப்புரிமை Nikon Corporation
காப்பக வகை சுய-பிரித்தெடுத்தல்
மறுஉற்பத்தி அனுமதிக்கப்படாது
கேமராவின் சாதனநிரலைப் புதுப்பித்தல்
  1. கணினியின் வன் வட்டில் கோப்புறை ஒன்றை உருவாக்கி, விருப்பம் போல் பெயரிடவும்.
  2. செயல்முறை 1-இல் உருவாக்கிய கோப்புறையில் F-P610-V13W.exe-ஐப் பதிவிறக்கவும்.
  3. புதிய கோப்புறையில் துணைக்-கோப்புறை ஒன்றுக்கு சாதனநிரலைப் பிரித்தெடுக்க F-P610-V13W.exe-ஐ இயக்கவும். கிடைக்கும் கோப்பு மற்றும் கோப்புறை வரிசை கீழே காட்டப்பட்டுள்ளது:
    • firmware (சாதனநிரலைக் கொண்டிருக்கும் துணைக்-கோப்புறை)
    • firmware.bin (“firmware” கோப்புறையில் இருக்கும் கேமராவின் சாதனநிரல்)
  4. கார்டு துளை அல்லது கார்டு ரீடர் ஒன்றைப் பயன்படுத்தி, கேமராவில் வடிவமைக்கப்பட்ட மெமரி கார்டு ஒன்றுக்கு “firmware” கோப்புறையை நகலெடுக்கவும்.
    குறிப்பு: சாதன நிரலை மெமரி கார்டின் “firmware” (அனைத்திற்கும் மேலுள்ள) கோப்பகத்தில் நகலெடுப்பதை உறுதிசெய்யவும். மூலக் கோப்பகத்திற்கு உள்ளே இருக்கும் ஒரு கோப்புறையில் புதிய சாதன நிரலை நகலெடுத்தால், கேமராவால் அதை அடையாளம் காண முடியாது.
  5. மெமரி கார்டை கேமராவில் செருகி கேமராவை ஆன் செய்யவும்.
  6. அமை மெனுவில் சாதனநிரல் பதிப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, சாதனநிரல் புதுப்பிப்பை முடிப்பதற்கு திரையிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  7. ஒருமுறை புதுப்பித்தல் முடிந்ததும், கேமராவை ஆஃப் செய்து மெமரி கார்டை அகற்றவும்.
  8. சாதனநிரல் புதிய பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

குறிப்பு: புதுப்பித்தலை முடிப்பதற்கு தேவைப்படும் உபகரணம் பற்றிய கூடுதல் விரிவான அறிவுறுத்தல்கள் அல்லது விபரத்திற்கு, பின்வரும் pdf கோப்பை பதிவிறக்கம் செய்யவும்:
CPX_MS_FirmUp_Win_Ta.pdf (PDF) (0.24 MB)

குறிப்பு: Nikon-அங்கீகரித்த சேவை பிரதிநிதி மூலமும் உங்களுக்கான புதுப்பித்தலை மேற்கொள்ளலாம்.

தயாரிப்பு விளக்கம்
பெயர் COOLPIX P610 சாதனநிரல் பதிப்பு 1.3
ஆதரிக்கப்படும் கேமராக்கள் COOLPIX P610
ஆதரிக்கப்படும் சாதனநிரல் பதிப்புகள் பதிப்பு 1.0–1.2
கோப்புப் பெயர் F-P610-V13M.dmg
இயக்க முறைமை
  • macOS High Sierra பதிப்பு 10.13
  • macOS Sierra பதிப்பு 10.12
  • OS X 10.11.6
  • OS X 10.10.5
  • OS X 10.9.5
  • OS X 10.8.5
  • OS X 10.7.5
  • Mac OS X 10.6.8
குறிப்பு: கார்டு ரீடர் அல்லது உள்ளமைந்த மெமரி-கார்டுடன் கூடிய கணினி தேவை.
பதிப்புரிமை Nikon Corporation
காப்பக வகை சுய-பிரித்தெடுத்தல்
மறுஉற்பத்தி அனுமதிக்கப்படாது
கேமராவின் சாதனநிரலைப் புதுப்பித்தல்
  1. F-P610-V13M.dmg-ஐப் பதிவிறக்கவும்.
  2. கீழே இருக்கும் கோப்புறை மற்றும் கோப்பைக் கொண்டிருக்கும் வட்டு படிமம் ஒன்றை ஏற்படுத்த F-P610-V13M.dmg ஐகானை இரு-கிளிக் செய்யவும்:
    • firmware (சாதனநிரலைக் கொண்டிருக்கும் துணைக்-கோப்புறை)
    • firmware.bin (“firmware” கோப்புறையில் இருக்கும் கேமராவின் சாதனநிரல்)
  3. கார்டு துளை அல்லது கார்டு ரீடர் ஒன்றைப் பயன்படுத்தி, கேமராவில் வடிவமைக்கப்பட்ட மெமரி கார்டு ஒன்றுக்கு “firmware” கோப்புறையை நகலெடுக்கவும்.
    குறிப்பு: சாதன நிரலை மெமரி கார்டின் “firmware” (அனைத்திற்கும் மேலுள்ள) கோப்பகத்தில் நகலெடுப்பதை உறுதிசெய்யவும். மூலக் கோப்பகத்திற்கு உள்ளே இருக்கும் ஒரு கோப்புறையில் புதிய சாதன நிரலை நகலெடுத்தால், கேமராவால் அதை அடையாளம் காண முடியாது.
  4. மெமரி கார்டை கேமராவில் செருகி கேமராவை ஆன் செய்யவும்.
  5. அமை மெனுவில் சாதனநிரல் பதிப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, சாதனநிரல் புதுப்பிப்பை முடிப்பதற்கு திரையிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  6. ஒருமுறை புதுப்பித்தல் முடிந்ததும், கேமராவை ஆஃப் செய்து மெமரி கார்டை அகற்றவும்.
  7. சாதனநிரல் புதிய பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

குறிப்பு: புதுப்பித்தலை முடிப்பதற்கு தேவைப்படும் உபகரணம் பற்றிய கூடுதல் விரிவான அறிவுறுத்தல்கள் அல்லது விபரத்திற்கு, பின்வரும் pdf கோப்பை பதிவிறக்கம் செய்யவும்:
CPX_MS_FirmUp_Mac_Ta.pdf (PDF) (0.21 MB)

குறிப்பு: Nikon-அங்கீகரித்த சேவை பிரதிநிதி மூலமும் உங்களுக்கான புதுப்பித்தலை மேற்கொள்ளலாம்.

இறுதி பயனர் உரிமை ஒப்பந்தம்

இலவச Adobe® Reader® மென்பொருளைப் பயன்படுத்தி கோப்புகளைப் பார்க்கலாம்.
Adobe® Reader® ஐ பதிவிறக்கு.